Tuesday, 11 October 2011

கஞ்சத்தனம்

கஞ்சத்தனம்


அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹூ

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்:
அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும்,தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.


   وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். (அல்குர்ஆன் ஆலுஇம்ரான்3 :180)

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ


இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!(அல்குர்ஆன்,அத் தவ்பா, 9:34)

அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். என்று கூறினார்கள்;. (ஹதீஸ் சுருக்கம்.புகாரி 7061)